டிசம்பர் : 15, 2025

தலைவர் திரு.கமல்ஹாசன் M.P அவர்களின் எண்ணமும் செயலும் எந்த திறமையையும் பாராட்டுவதும் அவர்களது தேவைகளுக்கு பொருளுதவி செய்வதும் வழமையான ஒன்று.

அதனைப் போலவே மக்கள் நீதி மய்யம், விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளர் திரு.E.T.அர்விந்த்ராஜ் அவர்கள் விளையாட்டு வீரர்கள் அறிந்து கொண்டு அவர்களை நேரில் சென்று சந்தித்து பேசி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தலைவர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று அவர்களின் பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை கமல் பண்பாட்டு மையம் மூலமாக தலைவர் அவரது கரங்களினால் வழங்க செய்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கபடி போட்டியில் பதக்கம் வென்ற சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த செல்வி கார்த்திகா மற்றும் குழுவினரை மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டும் அவர்கள் பயிற்சிபெற செயற்கை ஆடுகளம் அமைக்க நன்கொடையும் தலைவர் அவர்கள் வழங்கினார்.

அவ்வகையில் கேரம் விளையாட்டில் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் தனி நபர் ஆட்டம் மற்றும் குழு ஆட்டம் என இணைந்தும் விளையாடி வெற்றி பெற்று மூன்று தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார் செல்வி கீர்த்தனா. நேரில் சென்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தார் மேலும் குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப் படிப்பை தொடரமுடியாமல் இருப்பதை சுட்டிக்காட்டி மேற்கொண்டு பள்ளிப்படிப்பை தொடர கட்சியின் சார்பாக மேற்கொண்டு தேவையான உதவிகளை வழங்கிட உறுதியளித்தார்.

https://twitter.com/maiamofficial/status/2000505424227783076?s=20

“சர்வதேச கேரம் போட்டியில் மூன்று தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்த செல்வி. கீர்த்தனா அவர்களுக்கு வாழ்த்துகள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில்,

மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச கேரம் போட்டியில், தனி நபர் ஆட்டம் மற்றும் குழு ஆட்டம் என மொத்தமாக மூன்று தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்த, சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி. கீர்த்தனா அவர்களை,

கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில், மாநிலச் செயலாளர் திரு. அரவிந்ராஜ், சென்னை மண்டல அமைப்பாளர் திரு. அரவிந்தன் ராம்குமார், இராயபுரம் மாவட்டச் செயலாளர் திரு. மாறன் ஆகியோர், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. U. பிரேம் ஆகியோர்,

செல்வி. கீர்த்தனா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். பயிற்சியாளர் திரு. நித்யன் அவர்களையும் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

மேலும் குடும்ப சூழல் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய செல்வி. கீர்த்தனா மீண்டும் படிப்பை தொடர அறிவுறுத்தியதுடன், அதற்கான உதவிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/Maiatamizhargal/status/2000965836761338067?s=20

நன்றி : மக்கள் நீதி மய்யம்